சென்னை மக்களே..! இனி கார்ல இப்படி பயணம் செய்தாலும் போலிஸ் வந்து பிடிக்கும்...!

By thenmozhi gFirst Published Sep 27, 2018, 4:43 PM IST
Highlights

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பொதுவாக கார், பேருந்து, ரயில் என அனைத்திலும் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது நண்பர்கள் அல்லது தெரியாத முகம் கொண்டவர்களை கூட பயணிகளாக தங்கள் சொந்த கார்களில் ஏற்றி சென்று பணம் பார்க்கும் ஒரு முறை தற்போது அதிகரித்து வருகிறது 

அதாவது சொந்தக்காரில், சொந்த பயணத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய காரை. ஒரு செயலி மூலம் ஆங்காங்கு உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து சென்னையிலிருந்து பெங்களூரு செல்வதும்,சென்னை முதல் மற்ற வெளியூர் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த தகவல், வட்டார போக்குவரத்து துறைக்கு தெரிய வர, பூவிருந்தவல்லியில் போக்குவரத்து அலுவலர்கள் அவ்வழியாக சந்தேகத்திற்கு உரிய காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது செயலி மூலம் இணைந்து பெங்களூரு செல்ல ஒரு நபருக்கு 700 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

சரி இதுல என்ன தப்பு இருக்குனு கேள்வி வரும் இல்லையா...? அதாவது இது சட்டப்படி குற்றம். இவ்வாறு செல்லும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் காப்பீடு தொகை கிடைக்காது.அதுமட்டுமில்லாமல் கார் ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே இது போன்ற முறையில் சவாரி செய்வது தவறு என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

click me!