நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் நான் கட்சியை கலைத்துவிடுகிறேன் - சீமான் சவால்

By Velmurugan sFirst Published May 24, 2024, 7:53 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றிருந்தால் நான் கட்சியை கலைத்துவிடுகிறேன் என சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியார்களை சந்திக்கையில், “வாயுக்கசிவை ஏற்படுத்திய கோரமண்டல் ஆலை குறித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசு அந்த ஆலையை திறக்க உத்தரவிடக்கூடாது. நாம் தமிழர் கட்சி அந்த ஆலையை திறக்க அனுமதிக்காது.

தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து மோடி பேசுகிறார். மோடியின் இத்தகைய பேச்சுக்களை ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பாக பேசியிருக்க வேண்டியது தானே என ஆவேசப்பட்டார்.

Latest Videos

ஓசி டிக்கெட் விவகாரம்; அரசுப் பேருந்துகளை ரவுண்டு கட்டி பழி தீர்க்கும் போலீஸ் - சீட் பெல்ட்க்காக பைன்

கேரளா மாநிலத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். திமுகவின் கூட்டணிக் கட்சி தானே கம்யூனிஸ்ட் அவர்களுடன் பேசி கட்டுமானத்தை நிறுத்த வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார். மேலும் தென் மாநிலங்களில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை நம்புகிறார்.

பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி; நிவாகிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த உயிர்பலி

முதலில் தனித்து நிற்பதற்கு பாஜகவுக்கு துணிவு இருக்கிறதா? மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. அப்போது பாஜக பெறும் வாக்குகள் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்து பாஜகவின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிடுகிறேன்” என சவால் விட்டார்.

click me!