காவலர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டம் என்ன ஆச்சு?

By Raghupati R  |  First Published May 24, 2024, 7:15 PM IST

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியது.


அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதம் தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குக் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் முதல்வர் மு.க ஸ்டாலின் 2021ம் ஆண்டில் காவலர் முதல் ஆய்வாளர்கள் வரையில் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, அவர்கள் எதிர்பார்த்த வகையில் சுமார் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்டார்.

Tap to resize

Latest Videos

குறிப்பாக, காவல்துறையில் நிலவும் பதவி உயர்வு போன்ற பிரச்னையை தீர்க்க, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தில் ஒரு பகுதியாக சிறப்பு குறைதீர்க்கும் முகாம், அரசு பேருந்து களில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அடடைகளை காண்பித்து இலவச பயணம், இதற்காக நவீன அட்டை அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துகளில் உயிரிழந்த உலகின் மிக முக்கிய தலைவர்கள்.. யார் யார் தெரியுமா.?

“தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும், மற்ற நேரங்களில் காவலர்கள் பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டும்” என்று அறிவித்துள்ளது.

“தமிழ்நாடு அரசின் நகரப் பேருந்துகளில் காவலர்கள் ஏறி பயணம் செய்தால் அவர்களிடம் பயணச்சீட்டு கேட்பதில்லை, வெளியூர் செல்லும் பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்தால் கண்டிப்பாக வாரன்ட் கேட்போம்” என்று தமிழக அரசின் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. "அரசுப் பேருந்துகளில் காவல்துறையினரை பயணச் சீட்டு இன்றி ஏற்றிச் செல்லலாம் என்ற அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை.

அதிகாரபூர்வமாக வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவோம்” என்று விளக்கம் அளித்துள்ளது. நிலை இப்படியிருக்க தமிழகம் முழுக்க அரசு பேருந்துகள் மீது டிராபிக் போலீசார் அபாரதங்கள் விதித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..

click me!