சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிடுவது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 188 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து ஆடவர் அணி, மகளிர் அணியில் என தலா 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு வரத் தொடங்கி விட்டார்கள். செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழா நேரு விளையாட்டரங்கின் உள் அரங்கத்தில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னைக்கு நாளை வருகிறார்.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பிரதமர் மோடி வருகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டியும் பிரதமரின் வருகையையொட்டியும் சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷன்ர் சங்கர் ஜிவால் நேரு விளையாட்டரங்கில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏழு மடங்கு அதிகரிக்கப்படும். பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதையும் படிங்க: Chess Olympiad : கோலாகலமாக வலம் வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி - பிரம்மாண்ட வரவேற்பு!
பாதுகாப்பு ஏற்பாடு கருதி பொது மக்கள் வழக்கம்போல் செல்லலாம். ஆனால், நேரு விளையாட்டு அரங்கம் அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும். சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54 ரவுடிகளை கைது செய்திருக்கிறோம்., சென்னையில் எல்லா இடங்களிலும் கண்காணிக்கப்படுகிறது. முக்கியமாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜூலை 28 அன்று நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை… அறிவித்தது தமிழக அரசு!