“ரூ. 2000 எடுத்தா 200 பிடிக்கிறாங்க” ICICI ATMல அநியாய கொள்ளை – பொதுமக்கள் வேதனை

 
Published : Nov 21, 2016, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
“ரூ. 2000 எடுத்தா 200 பிடிக்கிறாங்க” ICICI ATMல அநியாய கொள்ளை – பொதுமக்கள் வேதனை

சுருக்கம்

கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து. இதையடுத்து பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். பணத்தை வங்கிகளில் மாற்றுவதற்கு அதிகாலை முதல் இரவு வரை கால் கடுக்க வங்கியின் வாசலில் காத்திருக்கும் நிலை இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்கவும் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். மேலும், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 முறை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், அரசு ஒரு நாளைக்கு ரூ.2000க்கு மேல் எடுக்க முடியாது என கூறியது. இதனால், பொதுமக்கள் பலர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து ஏடிஎம் மையங்களிலும், ஒரு நாளைக்கு ஒருமுறை எடுத்தாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கான பணம் பிடிக்கப்படாது என அறிவித்தது.

இந்நிலையில், ஆவடி அருகே கோவில் பதாகை பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் இன்று காலை 8.57 மணிக்கு ஒருவர் ரூ.2000 எடுத்தார். ஆனால் அவருக்கு பணம் எடுத்ததற்கான ரசீதில், 2000 மற்றும் சர்வீஸ் சார்ஜ் ரூ.200 என வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு நல்ல திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இதில் பாதிக்கப்பட்டுள்ளது 80 சதவீதம் சாதாரண மக்கள் மட்டுமே. அதிலும் அவர்களுக்கு வங்கியில் பணம் எடுக்க சென்றால், அன்றைய பிழைப்பு போய்விடுகிறது.

இதனால், ஏடிஎம் மையங்களை முற்றுகையிட்டு பணம் எடுக்க வந்தால், அதிலும் இப்படி பணத்தை பறிப்பது நியாயமா என வேதனையுட்ன் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!