
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாஸ்திரி நகர் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் கிளை, கேஷியரிடம் இருந்து ரூ.25 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது. இதுதொடர்பாப போலி புகார் கொடுத்து , பணத்தை கையாடல் செய்த வங்கி மேலாளர், கேஷியர், ஆக்சிஸ் வங்கி துணை மேலாளர்கள் 2 பேர், டிரைவர் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் மைசூர் ஸ்டேட்வங்கி கிளை உள்ளது. இங்கு மேலாளராக லோகேஷ்ராவ், கேஷியராக இளங்கோ (44) ஆகியோர் வேலை பார்க்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளங்கோ, ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுகளை, நங்கநல்லூர் ஆக்ஸீஸ் வங்கி கிளையில் மாற்றுவதற்காக காரில் புறப்பட்டார். அவருடன், ஆக்டிங் டிரைவர் சக்திவேல் (44) காரை ஓட்டி சென்றார்.
கார் பல்லாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த 2 பைக், காரை முந்தி சென்று வழிமறித்தது. அதில் இருந்து இறங்கிய 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த, ரூ.25 லட்சத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசில், மேலாளர் லோகேஷ்ராவ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். இதற்கிடையில், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கியின் துணை மேலாளர் மஞ்சுநாத், வங்கியில் இருந்து ரூ.25 லட்சம் எப்படி வெளியே சென்றது என சாஸ்திரி நகர் போலீசில் புகார் செய்தர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த விவகாரத்தில் கொள்ளை போனதாக நடந்த நாடகம் குறிது ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு வங்கியில் உள்ள வரவு செயலவுக்களை சோதித்தபோது ரூ.25 லச்ம் பழைய 500, 1000 நோட்டுகள் கூடுதலாக இருந்தது. இதையடுத்து லோகேஷ்ராவ், இளங்கோவன் ஆகியோர் கூடுதல் பணத்தை கையாடல் செய்ய திட்டமிட்டர்.
அதில், லோகேஷ்ராவுக்கு நங்கநல்லூர் கிளை ஆக்சிஸ் வங்கியில் வேலை பார்க்கும் உதவி மேலாளர்கள் முகேஷ், மணிகண்டன் ஆகியோர் நன்கு பழக்கமானவர்கள். அவர்களிடம் இந்த ரூ.25 லட்சத்தை கொடுத்து, கொடுத்து புதிய கரன்சிகளை மாற்றி, பங்கு போட்டு கொள்ளலம் என முடிவு செய்தனர்.
அதன்படி ஆக்சிஸ் வங்கி உதவி மேலாளர் முகேஷுக்கு தகவல் கொடுக்க, அவர் புதிய கரன்சி நோட்டுகளை கொண்டு சென்று பல்லாவரம் அருகே காத்திருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை மாற்றி கொள்ளும்படியும் கூறினார். அதன்படி முகேஷ் பணத்தை எடுத்து கொண்டு சென்றார்.
அதன்படி அங்கு இளங்கோவன் சென்று கொண்டிருந்தபோது, பல்லாவரம் அருகே காரில் வந்த சிலர், அவர்களை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என தெரிந்தது.
இதையடுத்து போலீசார் டிரைவர் சக்திவேலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், வெள்ளிக்கிழமை இரவு இளங்கோவன், ஆக்டிங் டிரைவர் சக்திவேலை, கார் எடுத்து கொண்டு பல்லாவரம் வரை செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
என்ன விஷயம் என சக்திவேல் கேட்டதற்கு, பல்லாவரத்தில் உள்ள ஒருவரிடம் ரூ.25 லட்சத்தை கொடுத்து, வேறு பணத்தை வாங்கி வர வேண்டும் என கூறியுள்ளார். உடனே சக்திவேல், பொழிச்சலூரில் உள்ள தனது நண்பர் ராஜேஷ் என்பவருக்கு போன் செய்து, பணத்தை கொண்டு செல்லும் வழியில், அபேஸ் செய்ய திட்டத்தை வகுத்து கொடுத்தார். அதன்படி ராஜேஷ், காரில் சென்று, பணத்தை கொள்ளையடித்தார் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மேலாளர் லோகேஷ்ராவ், கேஷியர் இளங்கோவன், டிரைவர் சக்திவேல், ஆக்சிஸ் வங்கி உதவி மேலாளர்கள் முகேஷ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.
டிரைவர் சக்திவேல் கொடுத்த திட்டத்தின்படி வங்கி பணம் ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பி சென்ற, ராஜேஷ், உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள் பயன்படுத்திய கார், பொழிச்சலூர் சிவன் கோயில் அருகே பறிமுதல் செய்தனர்.
காரின் உரிமையாளர் பிரசாந்த்குமார் என்பவரை பிடித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பிரசாந்த்குமார், கார் தன்னுடையதுதான். பக்கத்துத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ், சொந்த தேவை அடிக்கடி வாங்கி செல்வார்.
அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை, திருமண நிகழ்ச்சிக்கு செல்ல தன்னிடம் காரை வாங்கி சென்றதாக கூறியுள்ளார். திருட்டுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.