
தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு, சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ80 கோடி வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தான் வசூலித்த பணத்தை, எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மதன் மாயமானார் .
பின்னா் காணாமல் பாேன மதனை தேடும் பணியை பாேலீசார் தீவிரப்படுத்தினா். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. மதனின் தாயார் தங்கமும் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார். இவ்வழக்கில் மதனை கைது செய்ய அடுத்தடுத்து போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.
இந்நிலையில் பல நாள் போலீஸ் தேடுதலுக்கு பிறகு மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதாகியுள்ள மதனை போலீசார் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இதன் மூலம் பல பரபரப்பான உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.