கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மக்களை நம்பி களம் இறங்குகிறேன்.
தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து ஆரம்பமாக வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டாலும் பாஜக தான் கோவையில் வெற்றி பெறும். தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.
undefined
இதையும் படிங்க: சூடுபிடித்த விருதுநகர் களம்; விஜயகாந்த் மகனை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டி..
தமிழ்நாட்டு அரசியலில் தான் இருப்பேன். டெல்லி அரசியலை விட தமிழ்நாட்டின் அரசியலை தான் விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தின் பேரில் கோவை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தலில் எனது சண்டை ஆதிக்க சக்திகளோடும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுத்தவர்களோடும். கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மக்களை நம்பி களம் இறங்குகிறேன்.
இதையும் படிங்க: KOVAI : ஸ்டார் தொகுதியாகும் கோவை? அண்ணாமலை சாதிப்பாரா.? சறுக்குவாரா.? மும்முனைப் போட்டியால் களம் யாருக்கு.?
பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது 2026-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்காகதான். திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் இருப்பதெல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கை. 2026-ம் ஆண்டு பெட்ரோல் டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள். எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது. பிரசாரத்தின்போது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு, கோபாரபுரத்தோடு என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார்.