ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு – கல்லூரிகளை புறக்கணித்த மாணவ மாணவிகள்...

Asianet News Tamil  
Published : Feb 27, 2017, 06:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு – கல்லூரிகளை புறக்கணித்த மாணவ மாணவிகள்...

சுருக்கம்

Hydrocarbon resistance will continue the program - College students avoid

அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள், ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து அமைதி பேரணி நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம்  வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் எனவும், கூறி இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர், வகுப்புகளை புறக்கணித்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை அமைதி பேரணி சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!