
என்னது ...? மெரினாவில் மீண்டும் இளைஞர்கள் போராட்டமா ...?
ஹைட்ரோ கார்பன் திட்டம்
சென்னையில் வரும் 2-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயம் பாதிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்திற்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்கள் ,வரும் 2 ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்
மெரினாவில் உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுகாக போராடிய இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக சென்னையில் வரும் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
அதே வேளையில் இன்று, மெரினா கடற்கரையில் வள்ளுவர் சிலை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக போராடிய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் வரும் 2-ம் தேதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மெரினாவில் மீண்டும் மாணவர்களின் போராட்டம் வலுக்குமா ? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.