அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் நீக்ககோரிய வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

 
Published : Feb 27, 2017, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் நீக்ககோரிய வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

சுருக்கம்

The three cases were taken to trial this afternoon

சொத்துவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பெயரில் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்ககூடாது, அவரின் புகைப்படத்தை அரசின் அலுவலகங்களில் இருந்து நீக்க வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவகத்தை அரசு செலவில் கட்டக்கூடாது என்றும் அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி மூன்று வழக்குகளும் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர்களின் புகார்கள் குறித்து தமிழக அரசு, தலைமைச் செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 20-ம் தேதிககு ஒத்திவைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!