கள்ளக்காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றிய கணவன்... குடும்பத்தாரும் உடந்தை...

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 30, 2018, 8:56 AM IST

நாகப்பட்டினத்தில், கள்ளக் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றி கணவன் கொல்ல முயன்றுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் கணவன் கைது செய்யப்பட்டார். 
 


நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில், கள்ளக் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றி கணவன் கொல்ல முயன்றுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் கணவன் கைது செய்யப்பட்டார். 

Tap to resize

Latest Videos

undefined

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் திருஞானசம்பந்தம் (32). இவருக்கும் இதேப் பகுதியைச் சேர்ந்த வினோதா (30) என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இந்த நிலையில், திருஞானசம்பந்தத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. கணவனின் கள்ள உறவு குறித்து வினோதா அவரிடம் கேட்டுள்ளார். "அதெல்லாம் நீ கேட்காதே" என்று அதட்டிய கணவன், மனைவியை வசைபாடியுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

திருஞானசம்பந்தத்தின் இந்த செயலுக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தை. ஒருக்கட்டத்தில் திருஞானசம்பந்தம், "நான் அவளை தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்" என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அழுத வினோதா, "நான் இருக்கும்வரை அது நடக்காது" என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வினோதாவின் வாயில் எலி மருந்தை ஊற்றிக் கொல்ல முயன்றனர். வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். திருஞானசம்பந்தத்திடம் இருந்து வினோதாவை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், இதுகுறித்து வினோதா மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கல் திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என மொத்தம் ஆறு பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில் திருஞானசம்பந்தத்தை காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கள்ளக் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றி கணவன் மற்றும் குடும்பத்தார் கொல்ல முயன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

click me!