எங்கும் அலைய வேண்டாம்.. வீட்டிலிருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு சான்றாக வருவாய்த்துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணமாகும்.


நிலம் அல்லது வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ பட்டா, சிட்டா போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ அல்லது அதை வைத்து அடமானம் பெறவோ நம்மிடம் முதலில் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.

பட்டா என்பது என்ன?

Latest Videos

பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு சான்றாக வருவாய்த்துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணமாகும். இது அந்த குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டப்பூர்வ ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. உரிமையாளர் பெயர், பட்டாவின் எண்ணிக்கை, புல எண் மற்றும் துணை பிரிவு, மாவட்டம், தாலுகா மற்றும் புல எண் மற்றும் துணை பிரிவு, மாவட்டம், தாலுகா மற்றும் கிராமத்தின் பெயர், நிலத்தின் பரிமாணம் அல்லது பரப்பளவு, வரி விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

சிட்டா என்பது என்ன?

சிட்டா என்பது ஒரு அசையா சொத்து பற்றிய சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆவணத்தில் உரிமை அளவு, பரப்பளவு போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். நிலத்தின் வகை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்பதை உறுதிப்படுத்துவதே சிட்டாவின் முதன்மை நோக்கமாகும்.

பத்திரம் என்பது என்ன?

பத்திரம் என்பது பதிவு துறையில் இருந்து பெறக்கூடிய, ஒரு ஆவணம். ஒருவரிடம் இருந்து வாங்கிய நிலத்தை பதிவு செய்வதே பத்திரம் ஆகும். எனினும் அந்த பத்திரத்தில் விவரங்கள் தவறாக இருந்தால், மூலப்பத்திரத்தில் உள்ள உரிமையாளரின் பெயரே செல்லுபடியாகும்.

இதற்கு முன்பு வரை பொது இ சேவை மையம் அல்லது சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்தது. பின்னர் அந்த விண்ணப்பம் ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த செயல்முறையால் கால விரயம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ” எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பட்டா மாறுதலுக்கு விண்ண்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தற்போது ஆன்லைனிலேயே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக பொது இ சேவை மையத்திற்கோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ அலைய வேண்டியதில்லை. சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால், ஆன்லைனிலேயே எளிதாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். 

பட்டா மாறுதலுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

  • கிரைய பத்திரம்
  • செட்டில்மெண்ட் பத்திரம்
  • பாகப்பிரிவினை பத்திரம்
  • தானப்பத்திரம்
  • பரிவர்த்தனை பத்திரம்
  • விடுதலை பத்திரம்

மற்ற ஆவணங்கள்

ஆதார் அட்டை

  • பான் அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • குடும்ப அட்டை
  • பாஸ்போர்ட்
  • வாக்காளர் அடையாள அட்டை

ஆன்லனில் எப்படி பட்டாவை மாற்றுவது?

பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு நபரும் tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்திற்கு சென்ற உடன் பெயர், செல்போன் எண், இ மெயில் முகவரி ஆகிய விவரங்களை பதிவிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் நிலத்தின் விவரங்கள் மற்றும் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் கிரைய பத்திரம் உள்ளிட்ட நிலத்தின் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு ரூ.60, உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப செயல்முறை முடிந்த உடன், உங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் சம்மந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்.

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? 5 மணிநேரம் கரண்ட் கட்..!

click me!