7 முறை தமிழகத்தை சுற்றி வந்த மோடி!! ஒரே முறை வந்து 40 தொகுதியையும் அள்ளிச்சென்ற ராகுல்.!பாஜக சறுக்கியது எங்கே?

By Ajmal Khan  |  First Published Jun 5, 2024, 9:48 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை குறிவைத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சுற்றி சுற்றி வந்த நிலையில், தமிழகத்திற்கு ஒரே முறை மட்டுமே வந்து 40 தொகுதிகளையும் ராகுல்காந்தி அள்ளிச்சென்றுள்ளார்.


தமிழகத்தையே சுற்றி வந்த மோடி

நாடாளுமன்ற தேர்தல் தொடங்வகுவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை பாஜக குறிவைத்து காய் நகர்த்தியது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து குறைந்தபட்டசம் 10 தொகுதிகளை நிர்ணயித்தது. அதற்கு ஏற்றபடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரையை தொடங்கினார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பிரபலமான மூத்த தலைவர்கள் தமிழிசை, பொன்னார், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், ராதிகா,  ஓபிஎஸ், டிடிவி தினகரன் என போட்டியிட செய்தது. எனவே இந்த முறை கண்டிப்பாக பாஜக குறைந்தது 10 தொகுதிகளை வென்று விடும் உறுதியாக நம்பினர். இதற்கு ஏற்றார் போல் பிரதமர் மோடியும் அடுத்தடுத்து தமிழகத்தையே சுற்றி சுற்றி வந்தார்.

Tap to resize

Latest Videos

இந்த 6 தொகுதிகளில் 3வது இடம்! 12 தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள்! தமிழக அரசியல் அரங்கை அதிரவிடும் சீமான்!

ரோட் ஷோ முதல் பொதுக்கூட்டம் வரை

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே திட்டமிட்டபடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கோவை, சேலம் என பல மாவட்டங்களுக்கு சென்று பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். அடுத்ததாக சென்னை மற்றும் கோவையில் ரோட் ஷோ நடத்தினார்.  இதன் காரணமாக பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்ததாக அண்ணாமலை சொல்ல தொடங்கினார். அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரே ஒரு நாள் மட்டுமே தமிழகம் வந்தார். இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவை திரட்டினார். இந்தநிலையில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி பறித்தது. பாஜக தான் போட்டியிட்ட பல இடங்களில் டெபாசிட் இழந்தது.

மோடியும் ராகுலும்

இதனால் பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்தல் வெற்றி தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த வெற்றி திமுகவிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும் இந்த வெற்றி மோடிக்கு எதிராக வாக்குகள் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் விழுந்த ஒட்டுக்கள் என கூறியுள்ளனர். அதன் காரணமாகவே நாடு முழுவதும் எதிர்ப்பு ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான பிரச்சாரம், மத அடிப்படையில் பிரச்சாரம் போன்றவையே பாஜகவிற்கு பின்னடைவை தந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி வாய்ப்பு இருந்திருக்காது என்ற கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுகவிற்கு பதிலாக அதிமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும் என கூறுகின்றனர்.

EPS : 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோற்றதற்கு இது மட்டும் தான் காரணம்.! வேதனையோடு கூறிய எடப்பாடி

click me!