தேசிய அளவில் கிங் மேக்கரான முதல்வர் ஸ்டாலின் டெல்லி பறந்தார்! இண்டியா கூட்டணியின் அடுத்த பிளான் என்ன?

By vinoth kumar  |  First Published Jun 5, 2024, 9:44 AM IST

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களிலும், இண்டியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


இன்று மாலை டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களிலும், இண்டியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Latest Videos

இதையும் படிங்க: திருவள்ளூர் தொகுதியில் வரலாற்றுச் சாதனை வெற்றி படைத்த காங்கிரஸ் வேட்பாளர்! யார் இந்த சசிகாந்த் செந்தில்?

டெல்லி, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேதசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் முழுவதும் கைப்பற்றினாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசதம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு  இண்டியா கூட்டணி அதிர்ச்சி கொடுத்தது. இதனால், மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி  நிதிஷ்குமார், சந்திரபாபு நாடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. ஆனால், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு தங்களின் ஆதரவு பாஜகவுக்குதான் என திட்டவட்டமாக கூறிவிட்டனர். 

இதையும் படிங்க: இந்த 6 தொகுதிகளில் 3வது இடம்! 12 தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள்! தமிழக அரசியல் அரங்கை அதிரவிடும் சீமான்!

இந்நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக  சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அவர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!