DMK : திமுக அலையில் சிக்கி காலியான அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் டெபாசிட்.!எத்தனை தொகுதிகளில் தெரியுமா?

By Ajmal KhanFirst Published Jun 5, 2024, 8:05 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் திமுக அலையில் சிக்கி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் டெபாசிட் இழந்துள்ளது. அந்த வகையில் எத்தனை தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
 

அடுத்த பிரதமர் யார்.?

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக கூட்டணிக்கும்- இந்தியா கூட்டணிக்கும் தொடர் மோதல் ஏற்பட்டது. நீயா.? நானா.? என்ற போட்டியானது தொடர்ந்தது. தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து விடுவோம் என உறுதியாக நம்பிய பாஜகவின் கனவு தவிடு பொடியானது. பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதியை அடைய முடியாமல் 244 தொகுதியோடு பாஜக தனது வெற்றி கணக்கை நிறுத்திக்கொண்டது. அதே நேரத்தில் பாஜக தனது கூட்டணியோடு சேர்த்து 294 தொகுதியை பிடித்தது.

Latest Videos

திருவள்ளூர் தொகுதியில் வரலாற்றுச் சாதனை வெற்றி படைத்த காங்கிரஸ் வேட்பாளர்! யார் இந்த சசிகாந்த் செந்தில்?

திமுக அலை- காலியான டெபாசிட்

தமிழகத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில்  திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பிடித்தது.  தமிழகத்தில் பாஜக வெற்றிக்கொடி நாட்டும் என உறுதியாக நம்பிய அண்ணாமலையின் கனவு பழிக்காமல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையே ஏற்பட்டது. இந்த தோல்வியால் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் டெபாசிட் இழந்துள்ளது. தொகுதியில் பதிவான ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு ஓட்டுகள் பெற்றால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய டிபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும். லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாயும்; எஸ்.சி., - எஸ்.டி., வேட்பாளர்கள் 12 ஆயிரத்து 500 ரூபாயும் டிபாசிட் தொகை செலுத்த வேண்டும்.

அதிமுக - பாஜக டெபாசிட் இழந்த தொகுதிகள்.?

இது வைப்பு தொகையாக வைக்கப்படும். இதில் குறிப்பிட்ட வாக்குகளை பெறாத கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். அந்த வகையில், பாஜக கூட்டணி 22 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.  இதனையடுத்து அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி 11 இடங்களில் டெபாசிட் காலியாகியுள்ளது. பாமக 10 தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 6 இடத்தில் டெபாசிட் இழந்துள்ளது. தமாகா 3 இடத்தில் டெபாசிட் காலியானது. நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது. 

அதே நேரத்தில் 2 இடங்களில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை 4 ஆம் இடத்துக்கு தள்ளி விட்டது. 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3 வது இடம் பிடித்துள்ளது. அதிமுகவை பொறுத்த வரை தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 9 தொகுதிகளில் 3ஆம் இடத்தையும்,3தொகுதிகளில் 4ஆம் இடத்திற்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. 

என்னுடைய பெயரிலேயே பல சுயேட்சைகள்.. கங்கணம் கட்டி தோற்கடிச்சுட்டாங்க.. தர்மத்தை மறக்காத ஓபிஎஸ்!

click me!