பாலியல் வழக்கு.! ஞானசேகரனுக்கு எந்த எந்த பிரிவில் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை

Published : Jun 02, 2025, 02:00 PM ISTUpdated : Jun 02, 2025, 02:13 PM IST
anna university case

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 குற்ற வழக்குகளிலும் தனித்தனியே தண்டனை அறிவிக்கப்பட்டு, 

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஞானசேகரனுக்கு எந்த பிரிவில் என்ன தண்டனை ? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து என்ன தண்டனை என்பது தொடர்பாக ஜூன் 2ஆம் தேதி இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். 

இன்று காலை தீர்ப்பை வழங்கிய சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலக்ஷ்மி, குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், 30 ஆண்டுகளுக்கு எவ்வித சலுகைகளையும் கொடுக்காமல், ஏக காலத்திலேயே முழுமையாக சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார். இதனையடுத்து குற்றவாளி ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட 11 குற்ற வழக்குகளிலும் தனித்தனியே தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரனுக்கு 11 பிரிவில் தண்டனை விவரம் என்ன.?

பி.என்.எஸ் சட்டப்பிரிவு

1. 329 - விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் - 3 ஆண்டுகள்

2. 126(2) - சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் - 1 மாதம்

3. 87 - வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் - 10ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்

4. 127(2) - உடலில் காயத்தை ஏற்படுத்துதல் - 1 ஆண்டுகள்

5. 75(2) - விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் - 3 ஆண்டுகள்

6. 76 - கடுமையாக தாக்குதல் - 7 ஆண்டுகள், 10ஆயிரம் ரூபாய் அபராதம்

7. 64(I) பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் - 25,000 அபராதம்

8. 351(3) கொலை மிரட்டல் விடுத்தல் -7 ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்

9. 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல் - 3ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்

10. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் - 3 ஆண்டுகள், 25ஆயிரம் அபராதம்

11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் 2002 பிரிவு 4 - தண்டனை இல்லை

மொத்தமாக 90,000 அபராதம் விதித்த நீதிபதி, அந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!