தமிழ்நாட்டில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: மத்திய அரசு தகவல்!

By Manikanda Prabu  |  First Published Aug 1, 2023, 7:21 AM IST

தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், “2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கையைக் கூறுக? மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 1-8 வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கான மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கவும்; 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இந்த காலியிடங்களை நிரப்பாததற்கான காரணங்களை வழங்குக? குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் இணைப்பு /ஒருங்கிணைத்தல்/பகுத்தறிவு ஆகியவற்றின் கீழ் மூடப்பட்ட பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் அத்தகைய பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் வேறு பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்களா? பாதிக்கப்பட்ட குழந்தைகள் கல்வியைத் தொடர அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை என்பதைக் கூறுக?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

அதற்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணாதேவி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதன்படி, 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒப்பளிக்கப்பட்ட மொத்த ஆசிரியர் பணி இடங்கள் 1,44,968 எனவும் அதில் 143215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஆதி திராவிடர் துணைத்திட்ட நிதியை தவறாக பயன்படுத்தப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்!

அமைச்சர் அளித்துள்ள விவரங்களின்படி, பாஜக ஆளும் குஜராத்தில் 19,963; மத்தியபிரதேசத்தில் 69,667; உத்தரப்பிரதேசத்தில் 1,26,028 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முன்பு பாஜக கூட்டணி ஆட்சி செய்த பீகாரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 1,87,209 ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 949 இடங்கள் காலியாக உள்ளன.

click me!