நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - அமைச்சர் தகவல்

By Velmurugan s  |  First Published Jul 31, 2023, 10:52 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றது போல ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இலவசமாக பார்க்க அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது குறித்து துறை அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்யப்படும்.


சென்னை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு  விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பாதுகாப்போடு பள்ளிக்கு வந்து சேர்வதற்கும், பணிச்சுமையை  குறைப்பதற்கும் மட்டுமல்லாது  பல்வேறு வகையில் உதவிகரமாக இருக்கிறது.

பொருளாதார நெறுக்கடி சூழலிலும் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை நிறுத்தக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர்களை தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருககும் விலையில்லா மிதவண்டிகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கு முதல்வர் வைக்கும் ஒரே வேண்டுகோள் படியுங்கள் என்று தான்.

Tap to resize

Latest Videos

மாணவச் செல்வங்களின் 60 ஆண்டு வாழ்க்கை பயணத்தை நிர்ணயிக்கும் கல்வியை முறையாக பயில வேண்டும் அப்போது தான. உங்கள் வாழ்க்கை சீறும் சிறப்புமாக அமையும் என்றார். தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, முதலமைச்சர் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின்  அறிவுரைகளை ஏற்று  வழிநடக்க வேண்டும். 

புதுவையில் “புத்தகை பை இல்லா நாள்” பள்ளி மாணவர்களை பார்த்ததும் குழந்தையாக மாறி நடனமாடிய ஆளுநர் தமிழிசை

அப்போதுதான் மிதிவண்டி சக்கரம் போல உங்கள் வாழ்க்கை சக்கரமும் மாறும் என்றார். கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்துங்கள். மாணவர்களை காக்க முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் எனத் தெரிவித்தார். கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்வை நிலை கொள்ள செய்ய வேண்டும் என்ற பெரியவர்கள் சொல்படி செயல்பட வேண்டும். 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் மிக பெரிய நிதி நெருக்கடி இருந்தது. அதை படிப்படியாக மீட்டு எடுத்து வரும் வேளையிலும், கல்வித்துறைக்கு இருக்கும் மற்ற துறைகளை விட அதிகமாக 40 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கவனத்தை முழுவதும் படிப்பில் மட்டும் செலுத்துங்கள், அனைவரும் உயர்கல்விக்கு செல்லும் அளவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடுத்ததாக, புனித கேப்ரியல் மேல்நிலைப் பள்ளியில் 20 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 538 மாணவர்களுக்கு 74 லட்சத்து 34 ஆயிரத்து 560 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு; அதிக குறியீடுகள் பெற்று தமிழகம் தொடர்ந்து முதல் இடம்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார். ஆசிரியர் சங்கங்களுடன் 20 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளேன். ஆசிரியர்கள் கருத்துகள் குறித்து நிதி அமைச்சருடன் பேசி இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றது போல ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இலவசமாக பார்க்க அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது குறித்து துறை அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்யப்படும்.

மாணவர்களின் தகவல்களை எமிஸ் செயலியில் பதிவு செய்ய ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்ற கேள்விக்கு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப செயலி மேம்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சுலபமான வகையில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பதில் அளித்தார்.

click me!