தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால், தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரம் காட்டி வருகிறது. சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில், முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 50 ஆயிரம் பேருக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது. சுமார் 100 செவிலியர் மாணவிகள் லஸ் கார்னர் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது எனவும், தமிழகத்தில் இன்று காலை வரை 8970 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சைகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்… உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!
பள்ளிகளுக்கு கட்டுப்பாடு
31 வது தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறிய அமைச்சர் தடுப்பூசி செலுத்துவது முகக்கவசம் அணிவது மட்டுமே நோய் தடுப்பு முறை எனவும், மக்கள் தடுப்பூசி முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதிமுக பொதுக்குழு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பொதுக்குழு நடத்த தடையில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நடத்த வேண்டும். கூட்டத்துக்கு வருபவர்கள் முக்க்கவசம் அணிந்திருப்பது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கட்சிக்காரர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அதை செய்வார்கள் என நம்புகிறேன் என கூறினார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் பின்னணி என்ன?... அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்
நடிகை மீனாவின் கணவர் எப்படி இறந்தார் தெரியுமா?
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த ஆறுமாதமாக உடல்நலம் சரியில்லாமல் உள்ளதாகவும், உறுப்பு தானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதாக கூறினார்.
இதையும் படியுங்கள்