கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த டாட்டா ஏசி மினி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 250 அட்டைப்பெட்டிகளில் ஹாட் பாக்ஸ்களை மறைத்து வைத்து கொண்டு செல்வதைக் கண்டுபிடித்தனர். அவற்றுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில்யில் மூன்று பறக்கும் படை குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் நிலையான கண்காணிப்பு குழுக்களும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாலாட்டின்புதூர் சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆனந்த லட்சுமி தலைமையிலான குழுவினர் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த டாட்டா ஏசி மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 250 அட்டைப்பெட்டிகளில் ஹாட் பாக்ஸ்களை மறைத்து வைத்து கொண்டு செல்வதைக் கண்டுபிடித்தனர். அவற்றுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
சூறாவளி பிரச்சாரத்துக்கு ரெடியான ஸ்டாலின்! சுற்றுப்பயண அட்டவணை வெளியிட்ட திமுக!
இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 250 ஹாட் பாக்ஸ்களையும் பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். தேர்தல் வட்டாட்சியர் வெள்ளத்துரை, வருவாய் வட்டாட்சியர் சரவண பெருமாள் ஆகியோரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.
ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ஹாட்பாஸ்களின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஹாட் பாக்ஸ்களை மறைத்து எடுத்துச் சென்ற வேனில் இருந்து ஓட்டுநர் உள்பட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுநர் ராஜ்குமார் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அவருடன் வேனில் பயணித்த மற்றொருவர் தென்காசி மாவட்டம் ஓடைக்கரைபட்டியை சேர்ந்த சக்திவேல் என்றும் விசாரணையில் தெரிந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காதலி ஏமாற்றி கழட்டிவிடப் பார்க்கிறாரா... இதை செஞ்சு பிரேக்அப் ஆகாம பாத்துங்கோங்க!