kamal haasan : மருத்துவமனையில் கமல்ஹாசன்… அவரது நிலை என்ன? கூறுகிறது மருத்துவமனையின் அறிக்கை!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 5:35 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதை அடுத்து அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டிருந்தார்.

 

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

— Kamal Haasan (@ikamalhaasan)

முன்னதாக அவருக்கு தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்ற போது அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், கமல்ஹாசன் சுவாச பாதையில் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து கமல்ஹாசன் விரைவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அன்பு நண்பர் கலைஞானி அவர்கள் தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன். https://t.co/OSIT3JH961

— M.K.Stalin (@mkstalin)

அவரை தொடர்ந்து பலரும் கமல்ஹாசன் நலம்பெற வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நலமாக வரவேண்டும் சகோதரரே என இசைஞானி இளையராஜா வாழ்த்தியுள்ளார். இதுபோல பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய ரசிகர்களும் பால்குடம் எடுப்பது போன்ற பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

Thankyou for all your wishes and prayers for my fathers health 🙏 He is recovering well and is looking forward to interacting with all of you soon !!

— shruti haasan (@shrutihaasan)

இதை உறுதி செய்யும் வகையில் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக அவருடைய மகள் ஸ்ருதி ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், என் தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறார். என்று பதிவிட்டிருந்தார்.

click me!