நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..ஆனால்..! ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும்..

Published : Mar 18, 2022, 06:26 PM IST
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..ஆனால்..! ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஆசிரியர்களும்  பள்ளிக்கு வரவேண்டும்..

சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுப்பு.. பாடத்திட்டத்தில் இனி பகவத் கீதை.. கர்நாடகத்தில் வெடிக்கும் சர்ச்சைகள்..

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 20.03.2022 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க:Ration Shop: மக்கள் கவனத்திற்கு..! நாளை ரேஷன் கடை இயங்காது.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கூட்டுறவுத்துறை..

இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (உறுப்பினர்களின் தேர்வு) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் கலந்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை, தலைமை ஆசிரியர்கள் எளிய முறையில் எடுத்துரைக்க உள்ளனர்.

மேலும் படிக்க:TN Budget 2022-23: அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

இதனால், தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 20.03.2022 ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு வருகை தர உள்ளனர். எனினும், அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளதால், சனிக்கிழமையான நாளை, தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:சைக்ளிங் செய்து கொண்டே கின்னஸ் சாதனை - மாஸ் காட்டிய சென்னை சிறுவன்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்
செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்