Actor Vijay: விஜய்யின் அடுத்த படத்திற்கு மிரட்டல் விடுத்த உதயநிதி? சந்தேகம் கிளப்பும் அர்ஜூன் சம்பத்

By Velmurugan sFirst Published Jul 4, 2024, 11:21 AM IST
Highlights

நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கு உதயநிதி மிரட்டல் விடுத்ததால் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக பேசினாரா என்று தெரியவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜோசப் விஜய் 3 விஷயங்களை கூறி நீட் தேர்வு வேண்டாம் என்று பேசுகிறார். இந்தியா ஒன்றியம் என்று பேசுகிறார். திமுக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து பேசுகிறார். இளைஞர் சக்திகளை வைத்து அரசியலுக்கு வந்துள்ளார். மக்கள் மத்தியில் போதைப் பொருள்கள், லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு படிக்கும் மாணவர்கள் இடையே இந்தியா ஒரு நாடல்ல இந்தியா ஒன்றியம் என்று பேசி பிரிவினையை ஏற்படுத்துகிறார். 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் நீதி மையம் கமலஹாசன் வரிசையில் இணைந்து விட்டார். கமலஹாசன் ஒரு காலத்தில் டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் மற்றும் ஊழல் அரசியலை எதிர்க்கும் மக்கள் நீதி மையம் என்று டிவியை உடைத்தார். அதன் பிறகு தற்போது மக்கள் நீதி மையத்தின் சார்பாக திமுகவுடன் கூட்டணி அமைத்து இப்போது திமுகவிற்கு பிரசாரம் செய்து கொண்டு வருகிறார். 

திருச்சியில் 15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை? குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் துணிகரம்

அதுபோல ஜோசப் விஜய் கடந்த முறை பேசியபோது போதைப் பொருட்களை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும், பொதுமக்களுக்கும் அதில் கடமை இருக்கிறது என்று பேசினார். பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என போதைப் பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் இடையே அறிவுரைகள் வழங்கினார். அடுத்து அவருடைய கோட் (GOAT) திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏதாவது சொன்னாரா என்று தெரியவில்லை. 

திமுகவிற்கு நன்கொடை பெற மருத்துவ மாணவர்களின் தகுதிப்பட்டியலை விற்ற மாஜி அமைச்சர்.. வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

அதற்கு பயந்து நேற்றில் இருந்து ஜோசப் விஜய் திமுக-வின் ஊதுகோலாக மாறி உள்ளார். நீட் தேர்வு, கல்வி பொதுப்பட்டியலில் இருக்கக் கூடாது, மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று விஜய் கூறியதை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும்  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

click me!