ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Published : Apr 27, 2023, 04:55 PM IST
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சுருக்கம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களது பணத்தை இழந்ததோடு தற்கொலையும் செய்துக்கொண்டனர். இதனால் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்; பாஜக எம்எல்ஏ மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

அதை தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து தடை மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்,  ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூத்தாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதையும் படிங்க: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது மோசடி வழக்கு... இதுதான் காரணமாம்!!

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!