வேங்கைவயல் விவகாரம்; மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

By Velmurugan s  |  First Published Apr 27, 2023, 3:21 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுகளைக் கலந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் தொடர்ந்து திணறி வருகின்றனர். இந்நிலையில், 11 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களிடம் மரபணு சோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.

Tap to resize

Latest Videos

பழங்குடியின மாணவி கற்பழித்து கொடூர கொலை; குற்றவாளியிடம் ரகசிய இடத்தில் விசாரணை

ஆனால், 11 நபர்களில் 3 நபர்கள் மட்டுமே மரபணு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் மாதிரிகளை வழங்கியுள்ளனர். மற்ற 8 பேர் மருத்துவமனைக்கு வரவில்லை. இந்நிலையில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கூடுதலாக 10 பேரிடம் மரபணு மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி மேலும் 10 நபர்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

click me!