தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்கங்களை முன்னிட்டு அம்மாவட்ட ஆட்சியரே முடிவு எடுத்து உள்ளூர் விடுமுறை அறிவித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்கங்களை முன்னிட்டு அம்மாவட்ட ஆட்சியரே முடிவு எடுத்து உள்ளூர் விடுமுறை அறிவித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சிடுங்க.. சென்னையில் இன்று இந்த இடங்களில் மின்தடையா?
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. அந்த திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேரோட்டம் மிகவும் பிரபலமானது. ஆகையால், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- அடிச்சு தூக்கும் விலை.. புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 1ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை இயங்கும் அலுவலங்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் அரசு அறிவித்த தேதிகளில் மாற்றமின்றி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.