4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்; பெற்றோரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஆசிரியர்

By Velmurugan s  |  First Published Feb 20, 2023, 12:38 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மாணவியின் தந்தையிடம் ஆசிரியர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.


 

புதுக்கோட்டை, பிலிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் திருச்சி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டிக்கு வேனில் சென்றுள்னர். மாணவிகளுக்கு பாதுகாப்பிற்காக ஜெயசகேவிய எம்ப்பாயுலு, திலகவதி என்ற ஆசிரியர்கள் உடன் சென்றுள்னர். போட்டியில் மாணவிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

அதன் பின்னர் செல்லியாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி மாணவிகள் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றின் மைய பகுதியில் தண்ணீர் இருந்ததால் நீரின் ஆழம் குறித்து யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது 6, 7, 8ம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகள் 4 பேர் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மாணவிகளை மீட்க முயற்சித்தனர்.

இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மாணவிகளை மீட்க முயற்சித்தனர். ஆனால், ஒருவர் பின் ஒருவராக 4 மாணவிகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

லிப்ட் கேடு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன் பின்னர் மாணவிகளின் இறப்பைத் தொடர்ந்து பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு உயிரிழந்த மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சக மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.

மேட்டுப்பாளையத்தில் முதல் முறையாக தானமாக பெறப்பட்ட மனிதரின் தோல்

அப்போது பள்ளிக்கு வந்த மாணவியின் தந்தை ஒருவர், மாணவிகள் உயிரிழந்ததற்கான இறப்பு சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை அதற்குள் பள்ளியை எப்படி திறக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை பரிமளா பெற்றோரின் காலி்ல் விழுந்து மன்னிப்பு கோரினார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

click me!