புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் தாத்தா இறந்த துக்க நிகழ்வுக்கு சென்ற பேரனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்காக சென்னையில் உள்ள அவரது மகள் தனது கணவன், மகன் மற்றும் மகள் ஆகியோருடன் கல்லாலங்குடிக்கு சென்றார். இந்நிலையில் இறந்த ஆறுமுகத்தின் உடலை அடக்கம் செய்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்து விட்டனர்.
அப்போது வீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த கம்பியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றபோது சுவற்றில் இருந்த கம்பியில் இருந்து மின்சாரம் லெனின் என்பவரை தாக்கியது. இதனை பார்த்ததும் அருகே நின்று கொண்டிருந்த அவரது தங்கை ஜான்சி, லெனினை காப்பாற்ற முயன்று அவரை பிடித்துள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.
ஓரினசேர்க்கைக்காக வடமாநில இளைஞர் கடத்த முயற்சி; கத்தி, கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (13) ஓடிச் சென்று இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் காப்பாற்ற சென்ற பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உயிருக்கு போராடிய லெனின் மற்றும் ஜான்சியை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
புதுவையில் பாலை விடவும், மது அதிக அளவில் கிடைக்கிறது; காங்கிரஸ் எம்.பி. ஆதங்கம்
இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த பாலசுப்பிரமணியன் உடலும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தந்தையின் சாவுக்காக குடும்பத்தோடு வந்த மகள் தனது மகனையும் பறிகொடுத்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.