தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்! பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்! குற்றவாளியை நெருங்கிய சிபிசிஐடி போலீஸ்.!

By vinoth kumar  |  First Published Apr 21, 2023, 9:25 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 


வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு.. இபிஎஸ்-க்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் ரெய்டு?

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி 147 நபர்களிடம் விசாரணை நடத்தியும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. வர மறுத்த கள்ளக்காதலி.. இறுதியில் தலைக்கேறிய காமத்தால் நடந்த பயங்கரம்.!

இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நீரை பகுப்பாய்வு மையத்தில் பரிசோதனை செய்ததில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

click me!