பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதால் இனி வியாபாரிகள் அவற்றி பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதால் இனி வியாபாரிகள் அவற்றி பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
2019 ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்பதால் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஜனவரி 1-ம்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 50 மைக்ரான் என்ற அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.
பிளாஸ்டிக் பை, கப், பிளாஸ்டிக் இலை உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் தடை ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கோ, ஒழுங்குமுறை படுத்துவதற்கோ மத்திய அரசுக்கு தான் உரிமை உள்ளது.
எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை என்பதால் அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது பிளாஸ்டிக் தடை விதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவால் இனி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தபட உள்ளது. ஆகையால் வியபார்கள் இனி பிளாஸ்டிக்கை பயன்படுத்த முடியாது.