
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பக்த கோடிகள் பல லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்துவது மட்டுமின்றி,வருடம் தோரும் அல்லது வேண்டுதல் காரணமாகவோ முடியை காணிக்கையாக தருகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கும் முடியை, ஏழாம் விடப்பட்டு அதை வெளிநாட்டிற்கும், உள்நாட்டில் சில இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த முடி மூலம், முடி இல்லாத நபர்களுக்கு தேவையான விக், புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு அதிக விலையில் கிடைக்கிறது இந்த ஒரிஜினல் முடி.
நீ என்ன பெரிய மயிரான்னு திட்டுறீங்களே...
நீ என்ன பெரிய மயிரானு,ஒரு சிலர் கோபப்பட்டால் இது போன்று பேசுவார்கள்.ஆனால் மயிறுனு சாதாரணமாக சொன்னாலும்,ஏலத்தில் இந்த முடிக்கு கிடைக்கும் தொகையை பாருங்கள்...உண்மையில் இது பெரிய மயிறுதான் என நினைக்க தோன்றும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ரூ.25.33 கோடிக்கு ஏலம் போன முடி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை ஏலமிடப்பட்டதில் ரூ.25.33 கோடிக்கு விலை போனது.
ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்ட 50,400 கிலோ முடி, ரூ.25.33 கோடிக்கு விலை போயுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது