Chennai Pondy Bus Service : சென்னையை மிரட்டி வந்த மிக்ஜாம் புயல் இன்னும் 4 மணி நேரத்தில் ஆந்திர கடற்கரையில் கரையை கடக்க உள்ளது என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சென்னையில் மிதமான மழையே எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வந்தது, இதனால் சென்னை பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், பல இடங்களில் இன்னும் மின் இணைப்பும், இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கையை திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
ஆனால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்தும் நேற்றைய தினத்தை விட இன்று கூடுதலான பேருந்துகளை சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
குடித்துவிட்டு சண்டையிட்ட கணவனை கள்ளக்காதலனை ஏவி கொன்று புதைத்த மனைவி; திருப்பத்தூரில் பரபரப்பு
அதே நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 19க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆந்திரா மாநிலம் பாப்பட்லா அருகே கடல் பகுதியில் இன்னும் நான்கு மணி நேரத்தில் நிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக நேற்று சென்னை மற்றும் புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. புயல் அபாயம் இருப்பதினால் சென்னை மற்றும் புதுச்சேரி இடையிலான போக்குவரத்து சேவை இன்றும் இடைநிறுத்தப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் பெரிய அளவில் மழை இருக்காது என்ற பொழுதும் நாளை டிசம்பர் ஆறாம் தேதியும் சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.