
இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது (இரண்டு நாட்களில் 47 செ.மீ) மேலும் இது பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு வரலாறு காணாத மழையாக மாறியுள்ளது. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால் தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் பல இடங்களில் தேங்கியது என்றும் கூறப்படுகிறது.
2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். சுமார் 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
கனமழையால் ஏற்பட்ட பயங்கர சேதம்.. முடங்கிய செல் போன் சிக்னல் - தவிக்கும் சென்னைவாசிகள்!
ஆனால் இம்முறை பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு வரை மட்டும் சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சரும், அமைச்சரும் விடிய விடிய களத்தில் உள்ளனர் என்று அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றது.
மிக்ஜாம் புயலும் சென்னையை விட்டு தொலைவில் சென்று ஆந்திரா கடல் பகுதியில் இப்பொது கரையை கடந்து வருகின்றது. இதனால் பெரிய அளவில் இனி சென்னைக்கு மழை இருக்காது என்று கூறப்படுகிறது. சென்னை முழுவதும் பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், சில இடங்களில் வெள்ளநீர் வடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.