TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

By Raghupati R  |  First Published Mar 1, 2023, 4:22 PM IST

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, கடந்த டிசம்பர் முதல் பனிக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இருப்பினும், தமிழகத்தில் வட மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Tap to resize

Latest Videos

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்றின் வேறுபாட்டால் இன்றும், மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. அதேபோல மார்ச் 2,3,5 ஆகியன தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நீடிக்கும்.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் குமரி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

click me!