
யானை உடல்நிலை பாதிப்பு
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பார்வதி என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. பார்வதி யானைக்கு ஏற்கனவே கண்ணில் புரை ஏற்பட்டு தாய்லாந்து மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தமிழக நிதித்துறை அமைச்சரும் யானையின் உடல்நிலையை பார்வையிட்டு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
மருத்துவ குழு தீவிர சிகிச்சை
இந்த நிலையில் தற்போது யானைக்கு கடந்த ஒரு வாரமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளத்தாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யானை உடல் சோர்வடைந்ததால் ஒரு வாரமாக நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பார்வதி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோவில் வளாகத்தில் நடைபெறும் மாசி திருவிழாவில் பங்கேற்க யானைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரை கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்
இனி..கோயில் யானைகளுக்கு தடை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு