ஆர்எஸ்எஸ்(RSS) பேரணிக்கு அனுமதியளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 3ம் தேதி(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
ஆர்எஸ்எஸ்(RSS) பேரணிக்கு அனுமதியளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 3ம் தேதி(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்குமாறு தமிழக போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர்22ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை போலீஸார் செயல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்தவழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் “ ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்தலாம். மற்றவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் ஏற்படாதவாறு பேரணியை நடத்த போலீஸார் தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும். 3 தேதிகளை தேர்வு செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு போலீஸாரிடம் வழங்கிட வேண்டும், அதில் ஒரு தேதியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.
மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் உட்டுப்பட்டவர்... உச்சநீதிமன்றம் அதிரடி!!
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அ ரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பி நரசிம்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தமிழக அரசு தரப்பில் ஆஜராகினார். அவர் வாதிடுகையில் “ தமிழகத்தில் 6மாவட்டங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஆர்எஸ்எஸ் பேரணி திறந்த வெளியில் நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இந்த 6 மாவட்டங்களில் மட்டும் சுற்றுச்சுவர் கூடிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்கப்பட்டது. இதை சென்னை உயர் நீதிமன்ற ஒரு நீதிபதியும் ஏற்று உத்தரவிட்டார். ஆனால், கடந்த மாதம் 10ம் தேதி உயர் நீதிமன்ற அமர்வு, ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் சாலையில் பேரணி நடத்தலாம்,
ஆரோக்கியமான ஜனநாயகத்தில் எதிர்ப்பு அவசியமானது எனத் தெரிவித்தது. இதையடுத்து, மார்ச் 5ம்தேதி பேரணி ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கிறது. அதற்கு முன்னதாக இந்த மனுவை விசாரிக்கவேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பேரணி நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்
ஆதலால், அவசரம் கருதி மனுவை வரும் 3ம் தேதி விசாரிக்க வேண்டும், பேரணி 5ம் தேதி நடக்க இருக்கிறது தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு வரும் வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரிக்கிறோம் எனத் தெரிவித்தனர்