
தமிழ்நாடு, மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரெனக் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்றுடன் பெய்த இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். நகரில் மழை வெளுத்து வாங்கியதன் நேரடிக் காட்சிகள் இதோ.