சென்னையில் பல இடங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது, நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை நீடிக்க வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டதை போலவே தற்பொழுது சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் தற்போது பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2023-07-24-18:29:22 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக குன்றத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/f5iGlkHnQT
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc)நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் அதி கனத்த மழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்; மேடையில் இருந்து கீழே விழுந்த திமுக அமைப்பாளர் படுகாயம்