தமிழகத்தில் அக்.16 ஆம் தேதி வரை கனமழை தொடரும்.. சென்னையில் 2 நாட்களுக்கு மழை..

By Thanalakshmi VFirst Published Oct 13, 2022, 9:15 AM IST
Highlights

தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்.. மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்.. என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் ..?

மேலும் இன்று முதல் 16 ஆம் தேதி வரை தழகத்தில் கனமழை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை,திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடலின்‌ தெற்கு பகுதியில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்றும் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இன்றும் நாளையும் 16 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் மழை.. வானிலை அப்டேட்

click me!