"சேலை தான் Modern Style"ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு எம்.பி கனிமொழி பதிலடி.. என்ன சொன்னார் தெரியுமா..?

By Thanalakshmi V  |  First Published Oct 13, 2022, 8:45 AM IST

பெண்கள் சேலை கட்டுவதை மார்ட்ன் ஸ்டைலாக உணர வேண்டும் என்று ஆடைக் கட்டுபாடு குறித்து ஆளுநர் தமிழிசை தெரிவித்த கருத்திற்கு” ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று எம்.பி கனிமொழி பதிலடிக் கொடுத்துள்ளார். 


கோவையில் உயர்கல்வி நிறுவனத்தில் ”21ம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவிகளை தயார்ப்படுத்துதல்'  எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

புதிய கல்விக்கொள்கை குறித்து மாணவிகளிடம் பேசிய அவர், பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்றும்  சில கட்டுப்பாடுகளை பெண்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெண்கள் தங்களது ஆடைகளை குறைத்து போடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:தேவர் குருபூஜை.. பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர்.. பிரதமர் வருகை குறித்து பாஜக விளக்கம்..

தமிழ் கலாச்சாரம் தான் உலகில் சிறந்தது என்று கூறிய அவர், சேலை கட்டுவது நவீன கால மார்டன் ஸ்டைல் என்பதை பெண்கள் உணர வேண்டும் என்றார். இவரது இந்த பேச்சு தற்போது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு பெண்ணிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ” ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் தமிழிசையின் பேச்சு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் "பெண்கள் தான் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அது ஆடையாக இருந்தாலும் சரி, அலங்காரமாக இருந்தாலும் சரி அடுத்தவர்கள் முடிவு செய்ய முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க:வாயா போயானு பேசவே பயமாக உள்ளது..! ஸ்டாலின் அதிரடியால் அதிர்ந்து போன பொன்முடி

click me!