காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது (காலை 10 மணிவரை) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Southern Railway: பயணிகளுக்கு முக்கிய செய்தி! ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அதன்படி சென்னை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஜிஎஸ்டி சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் தெரியுமா?
இந் நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.