திங்கட்கிழமைக்கு பிறகு பாருங்க … தமிழ்நாட்டுல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது ! சென்னையில் இப்பவே வெளுத்து வாங்குது !

By Selvanayagam PFirst Published Sep 6, 2019, 8:15 PM IST
Highlights

செப்டம்பர் 9 ஆம் தேதிக்குப் பிறகு அதாவது வரும் திங்கட் கிழமைக்கும் பிறகு தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை கொட்டி வருகிறது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதே போல் கடந்த சில நாட்களாக  சென்னையிலும் மழை பெய்து வருகிறது 

இந்நிலையில்  சென்னையில் இன்று மாலையில் திடீரென மழை பெய்து பூமியை குளிர்வித்தது.  முதலில் சிறு தூறலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்து வருகிறது.  போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், மாதவரம், கொளத்தூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதேபோல் அண்ணாநகர், சூளைமேடு, சாலிகிராமம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் வில்லிவாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

சென்னை முழுவதும் பெய்து வரும் இந்த திடீர் மழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர்  பெருக்கெடுத்து ஓடுகிற்து. முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் திணறியது. இதனால் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக வரும் திங்கட்கிழமைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!