தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகம் முழுவதும் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த திங்கள்கிழமை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை பெய்தது. இதனால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வட தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:அடிச்சு தூக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்..!
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, சிவகங்கை, புதுகோட்டை, காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:வானத்தை பிளந்துக் கொண்டு கொட்டிய மழை… 10 நிமிடத்தில் இவ்வளவா?