
சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூச்சுத்திணறி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மின்சாதன பொருட்களை கையாளும் போது உஷாராக இருக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- மீண்டும் ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்து... பீதியில் பொதுமக்கள்..!
இந்நிலையில், சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் நகரில் கிரிஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் தங்கை ராதா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் வசித்து வந்தனர். நள்ளிரவில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த போது மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்தது. இதனால், ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- பிரிட்ஜ் வெடித்து தனியார் டிவி நிருபர் குடும்பத்துடன் பலி.. - தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம்
இதனையடுத்து, கிரிஜா வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனையடுத்து, உடல் கருகி உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க;- வெயில் கொடுமை தாங்காமல் பிரிட்ஜில் படுத்த 4 அடி பாம்பு…வீட்டு உரிமையாளர் அலறி அடித்து ஓட்டம்