ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக உயர்வு..!

By vinoth kumar  |  First Published Nov 4, 2022, 8:06 AM IST

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12  ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.


ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12  ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32லிருந்து ரூபாய் 35ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41லிருந்து, ரூபாய் 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இதையும் படிங்க;- 14 ஆண்டுகளாக விற்பனையில் ஆவின் டிலைட்..! மீண்டும் விளம்பரம் ஏன்.? யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு- பால்முகவர்கள்

Tap to resize

Latest Videos

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக 05:11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு, சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 10 குறைவு.

undefined

உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்தழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  நண்பன் எனக்கூறி அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் திமுக..! இருப்பதை பறிப்போம் என்பதுதான் திராவிட மாடலா- ஓபிஎஸ்

click me!