வானத்தை பிளந்துக் கொண்டு கொட்டிய மழை… 10 நிமிடத்தில் இவ்வளவா?

By Narendran SFirst Published Nov 3, 2022, 11:58 PM IST
Highlights

சென்னையில் 30 நிமிடங்களில் 45 மி.மீ மழை பதிவாகியுள்ளது அதிக மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் 30 நிமிடங்களில் 45 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது குறுகிய நேரத்தில் அதிக மழை பொழிவு என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி... புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மழை நீர் தேங்குவதை தடுக்க மழைநீர் வடிகால் அமைத்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு மழை நீர் தேங்கிய இடங்களில் தற்போது பெரிய அளவில் நீர் தேங்கவில்லை. இந்த நிலையில் மேலும் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. காலையில் வெயில் அடித்த நிலையில் தற்போது கனமழை

கடல் பகுதியில் உருவான மழை மேகத்தால் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக மழை பொலிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை தொடங்கிய மழை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. இதன் மூலம் 45 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அண்ணாநகரில் 10 நிமிடங்களில் 21.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

click me!