சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று காலை வெயில் அடித்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மாலை 4 மணியளவில் கருமேகங்கள் சூழந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க:மக்களே உஷார் !! சென்னையில் நாளைக்கு அடித்து ஊற்றுமா மழை..? சுட சுட வெளிவந்த வெதர் அப்டேட்.
இந்நிலையில் சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை 2 நாட்களாக விடாமல் பெய்தது. இதனால் சென்னையில் முக்கிய சாலைகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்த நிலையில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க:தொடர் மழையினால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. முழ்கிய தரைப்பாலம்.. 10 கிராம மக்கள் தவிப்பு..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட பகுகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.