சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை … நீண்ட நாட்களுக்குப் பின் குளிர் வித்த கனமழை!!

By Selvanayagam PFirst Published Jul 16, 2019, 7:55 AM IST
Highlights

சென்னையில் நேற்று  மாலை பல இடங்களில் மழை கனமழை கொட்டித் தீர்த்ததால் இதனான காலநிலை நிலவியது. . சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

அதன்படி, வட கடலோர மாவட்டமான சென்னையில் வெப்பசலனம் காரணமாக நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்று இரவு 7.45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

சென்னை எழும்பூர், வேப்பேரி, கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திரு.வி.க. நகர், அடையாறு, திருவான்மியூர் உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.


அதேபோல், சென்னையின் பிறபகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், போரூர், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

சென்னையில் நேற்று திடீரென்று மழை பெய்ததால், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. சாலை ஓரங்களில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நேற்று இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.


சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மழை பெய்தது. அதன்பிறகு, தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று பெய்த மழையால் சென்னை ஓரளவுக்கு குளிர்ந்தது. சென்னையை போலவே, புறநகர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.

இதனிடையே வெப்பசலனம் காரணமாக சென்னையில் இன்றும் சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதே போல்திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதியான வந்தவாசி பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

click me!