இந்த மூன்று மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப் போகுது மழை ! வானிலை ஆய்வு மையம் அதிரடி தகவல் !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2019, 9:23 AM IST
Highlights

கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தென் தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று  பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எந்தப் புயலும் இல்லாமல் மழை நார்மலாக பெய்துள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் காரணமாக, தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை முதல் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

click me!